தமிழகத்தில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட படிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளனர். 24 பள்ளிகளில் தலா இரண்டு பேர், 41 பள்ளிகளில் தலா மூன்று பேர், 50 பள்ளிகளில் தலா 4 பேர், 77 பள்ளிகளில் தலா 5 பேரும், 114 பள்ளிகளில் தலா 6 பேர், 95 பள்ளிகளில் தலா 7 பேர், 104 பள்ளிகளில் தலா 8 பேர் , 153 பள்ளிகளில் தலா 9 பேர் என மொத்தம் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கின்றனர். அதிலும் 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆக உள்ளது.
தமிழகத்தில் சுமார் 669பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.