Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 67 பேருக்கு வேலைவாய்ப்பு… புதிய தொழில் கொள்கை வெளியீடு…!!!

தமிழகத்தில் 67 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது. 28 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக 28,053 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்ட, 66,775 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்கள் அனைவரும் பயனடையலாம்.

Categories

Tech |