இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் போன்ற மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருக்கிறது. இத்திட்டம் மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் இருக்கிறது. அந்த வகையில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற முடியும். கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
தற்போது ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கிறது. 8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை அவர்களின் கல்விக்கு உதவும் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 8ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேவையான விவரங்களை அறிந்து 05/02/2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் 6995 மாணவ மாணவிகள் வருடந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.