Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இதில் கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்கள் பங்கேற்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்பின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை வருடத்துக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற வருடங்களை தொடர்ந்து 2021-2022 ம் கல்வியாண்டிலும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே  பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு 27ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Categories

Tech |