Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை  அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோன தொற்று காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிப்பதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் வருந்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலன், வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தை யுனிசெஃப்  ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி மாணவர்களுக்கான கையேடு ஆகியவற்றை அச்சடித்துக் கொள்ளவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |