Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் LKG, UKG குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடல்?…. கல்வித்துறை சூப்பர் பிளான்…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது திறந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஏனென்றால் குழந்தைகளுக்கான இந்த வகுப்புகள் நடத்த முடியாமல் கொரோன தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் போதுமான நிதி இல்லாத காரணத்தால் எல்கேஜ, யுகேஜி வகுப்புகளை நடத்துவதை கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்ததால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது. அந்த அடிப்படையில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் கொண்டு வரப்பட்டு மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்தது.

ஆனால் தற்போது அரசுப்பள்ளிகளில் போதுமான அளவு நிதி இல்லாததாலும், சிறிய குழந்தைகளை பாதுகாக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாலும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் சமூக நலத் துறையின் கீழ் செயல்படுவதால் குழந்தைகளுக்கான வகுப்புகள் அத்துறையின் கீழ் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |