தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு மாற்று ரேஷன் கார்ட் பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை தர மறுத்தால் ரேஷன் கார்டை வழங்க அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்று கார்டுகளுக்கு அரசு நிர்ணயித்த ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.