Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் TN TRB தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் பல அரசு தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதன்படி 2020-2021ம் வருடத்திற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியைகள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 ஆகிய பணிகளுக்கான காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த தேர்வுகள் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும், 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் என 2 அட்டவணைகளில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் விண்ணப்பத்தார்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக இன்று(பிப்..6) முதல் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் தேர்வர்கள் நுழைவு சீட்டினை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்து செல்வதோடு, அதனுடன் அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பே இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மாவட்ட அளவில் ஹால்டிக்கெட்டும், அதனைத் தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மைய ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |