தமிழகம் முழுவதும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் குரூப்-4 தேர்வுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வருகின்ற அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது