தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும் மொத்த பணியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழு விவரம் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு MBC, BC, Sc/ ST உள்ளிட்ட பிரிவினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. சாதாரண பணியிடங்கள் புறா ஆதார் அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் பிரதிநிதிகள் அரசியல் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்க நினைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று கூறியுள்ளார்.