Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை… அரசாணை வெளியீடு …. முதல்வர் அதிரடி …!!

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டது.

இதனால் சிபிசிஐடி போலீசார் விசாரணை பிடியில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும் சிக்கி உள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது, தமிழக போலீசும் வாய்மொழி உத்தரவாக பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதிக்கப்படுவதாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதிரடி ஒரு உத்தரவாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |