தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் கோவிலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்க தற்போது வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் கணினி மூலம் மட்டுமே அனைத்து வகையான கட்டணச் சீட்டுகளும் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது.