இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு அவருகின்றது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்திற்கு மேலும் 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் 2 லட்சம் கோடி கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி கிடைக்காதவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.