சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த இருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அது ஒமைக்ரான் தொற்றா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, மதுரை, கோவை. ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த நாகர்கோவிலை சேர்ந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஒமைக்ரேன் வகை தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.