சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமல்ல…. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ITI கல்லூரி என பல கல்லூரிகள் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
மருத்துவ கல்லூரியை பற்றி சொன்னால் தமிழக வரலாற்றிலேயே… ஏன் இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்த சரித்திரம் கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளோடு மருத்துவமனையையும் சேர்த்து கொண்டு வந்திருக்கின்றோம்.
ஒரே நேரத்தில் 20121- 2022ஆம் ஆண்டு 1,650 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே 2011 வரைக்கும் அம்மா அவர்கள் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுகின்ற வரை மருத்துவருடைய இடம் தமிழகத்தில் 1945. இன்றைக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கை… மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையினால் சுமார் 3060 பேர் கூடுதலாக மருத்து கல்லூரி படிக்கும் சூழ்நிலை உருவாகிக் தந்து இருக்கின்றின்றோம்.
எண்ணிப்பாருங்க 2011ல் 1945, மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கும் போது புதிதாக துவங்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று கூடுதலாக மருத்துவ இடங்கள் அதிகபடுத்தியது. இப்பொழுது 2021 -22ல் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற மருத்துவ கல்லூரியை சேர்த்து 3060 என்று சொன்னாள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளில் நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கு எங்களுடைய அரசு எடுத்துக்கொண்ட முயற்சி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.