Categories
தேசிய செய்திகள்

தமிழகம் வரும் மோடி, அமித்ஷா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்திற்கு வருகிற 11,12ம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்றனர். திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி வருகிறார். அதற்கு மறுநாள் 12ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிறார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மேற்கொள்ளவேண்டிய பணிகள், கட்சியைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றி அவர்கள் பேசவிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |