தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம், எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பாஜகவினர், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில், கொங்குநாடு என்று தனியாக பிரிக்கப்படும் என பேசி வந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்பிக்கள் எஸ். இராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராவ் பதிலளித்துள்ளார்.
இதில் அவர் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதற்கான எந்த திட்டமும், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என விளக்கமளித்துள்ளார். தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடாக உருவாக்க பாஜக போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.