வெப்பச்சலனம் காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மே 28 (நாளை) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மே 29, 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மே 31ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் கன்னியாகுமரி மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.