தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசசை நடுங்க வைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 55,152 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,856 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 77.80% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 52,955 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,86,250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 32 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 56,698ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை-1023
விருதுநகர்- 424
திருவள்ளூர்- 358
ராணிப்பேட்டை- 79
தேனி- 292
செங்கல்பட்டு-245
கோவை – 228
காஞ்சிபுரம்-220
தூத்துக்குடி- 189
கடலூர்- 264
வேலூர் – 160
நெல்லை- 155
க.குறிச்சி- 149
சிவகங்கை- 141
தி.மலை – 132
குமரி -128
தஞ்சை- 93
திருச்சி- 83
திருப்பத்தூர்-66
திண்டுக்கல்-64
சேலம்- 62
நாகை- 55
விழுப்புரம் – 50
அரியலூர்- 49
ராமநாதபுரம்- 47
தென்காசி- 45
புதுக்கோட்டை- 41
மதுரை – 40
நாமக்கல்- 39
திருவாரூர்- 31
கரூர்-25
கிருஷ்ணகிரி- 25
ஈரோடு – 20
நீலகிரி – 14
திருப்பூர்- 8
பெரம்பலூர் – 4
தர்மபுரி – 2