Categories
அரசியல்

தமிழகத்தில் முக்கிய முடிவு…. எதிர்பார்ப்பில் மக்கள்…. எடப்பாடி அதிரடி.!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவாக கடைகள் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது சென்னை பாதிப்பு குறைந்து வந்தாலும் அதன் அருகில் உள்ள மற்ற மாவட்டங்களில் பாதிப்பு பெருகி வருகிறது. இதுபோலவே கோவை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மதுரை ,விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப் படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |