தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ வல்லுநர் குழுவினரோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் நேற்று கேட்டறிந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இதில் மாவட்டம் வாரியாக சுகாதார கட்டமைப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் எடுத்துரைத்தார். அதேபோல ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட களநிலவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆலோசனை 3மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வு வழங் குவது பாதுகாப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்ததாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர்கள் குழுவினரோடு ஆலோசிக்க இருக்கின்றார். நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு உத்தரவில் மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் நாடு முழுவதும் இரவு நடமாட விதித்திருந்த தடை நீக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று மருத்துவ குழுவினரும் எடுக்கும் முடிவு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஒருநினைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.