தமிழகத்தில் 2021 -22 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021- 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில் நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி, பிரவீன், பிரசன், ஜித்தன் ஆகியோர் தலா 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999, எம்.பி.பிஎஸ் 1,930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650- என மொத்தம் 6,999- எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளத்தில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.