தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி ஒத்திவைப்பு.
தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
எனவே நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.