Categories
மாநில செய்திகள்

தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யணுமா?…. அறிவுறுத்திய நீதிபதிகள்….!!!!

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது. அவற்றில் 75-க்கும் அதிகமான வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் 38 உத்தரவுகளை நடைமுறைபடுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது எனவும் , 32 உத்தரவுகளில் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் மகா தேவன், ஆதிகேசவலு போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி அளித்த வாதங்கள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பழமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய பணியில் கோயில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக  ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இருதுறை அதிகாரிகளும் கோயில்களின் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி, 1 லட்ச ரூபாயிலிருந்து, 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழ்நாடு தணிக்கைத்துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதனிடையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, அதன் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

தினசரி 2000 ஏக்கர் வீத நிலங்கள் மீட்கப்பட்டும் வருகிறது. மேலும் கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கும்பகோணம் அருகில் பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் முன்பே கட்டப்பட்டுவிட்டது. ஆகவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏராளமானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனினும் சிலவற்றை மறுஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதனால் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுகிறோம். அதனை தொடர்ந்து நீதிபதிகள் மகா தேவன், ஆதிகேசவலு போன்றோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவுகள், கோயில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை பிறதுறைகள் ஏற்கவேண்டும்.

இதற்கிடையில் அறநிலையத் துறை பணிகளில் குழுக்கள் யாரும் தலையிடாது. பின் புனரமைப்பு பணிகளில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் (அல்லது) செயல் அலுவலர்கள் நேரடி முறையில் ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். கணக்கு தணிக்கைக்கு ஒரேஒரு நபர் தலைமையில் பிற 5அலுவலர்கள் உடைய குழு போதாது. ஆகவே குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கலுள்ள குழுவை அமைக்க வேண்டும் என அரசிடம் தெரிவியுங்கள். அறநிலையத்துறை கோயில்களின் பணிகளுக்காக இணையதளங்களின் மூலம் தனியார் அறக்கட்டளைகள் நிதிவசூலிப்பதை அனுமதிக்கக்கூடாது. அதுபோன்ற இணையதளங்களை உடனே முடக்கவேண்டும். அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

இனி கோயில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக் கூடாது. ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பின் உடனே வெளியேற்றுங்கள் மற்றும் கட்டிடங்களை பூட்டி சீல் வையுங்கள். இதனிடையில் தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருப்பின் அதை உடனே ரத்துசெய்ய வேண்டும். அதற்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருவதால் அதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் வாயிலாக வரும் வருவாயை முறையாக வசூலித்தாலே போதும். அதன் வாயிலாக தமிழ்நாடு அரசால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்யஇயலும். பின் இந்த வழக்கு விசாரணையானது 3 வாரங்ளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Categories

Tech |