தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23ம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஆசிரியர்கள் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்த பலனை உள்ளதால் அதனை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தீவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.