Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி”…. முன்னிலை வகித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்….!!!!!!

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்று அரசின் சாதனை திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செந்தில் மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார்கள்.

Categories

Tech |