தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர், தமிழகம் முழுவதும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேரை இடமாற்றம் செய்யுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரதீப்குமார் என்பவருக்கு பதிலாக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து 2- மாதங்களுக்கு முன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாராயணன் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு, கொலை குற்றங்கள் மற்றும் அதிக அளவில் போதை பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறப்பாக தம் பணியினை ஆற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் லேப்டாப் மற்றும் இருசக்கர வாகன வசதிகளுடன் பெண்கள் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு சிறப்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயலாற்றி வரும் சூழலில், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் அவர்களை நியமித்திருப்பது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.