Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம்…. “மாற்றுத்திறனாளிகளுக்கு பல நன்மைகள்”.… கலெக்டர் பெருமிதம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்ற நபர்களை போன்று அனைத்திலும் வலுவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள்  நலத்துறையின் சிறப்பான திட்டத்தின்  மூலமாக  அவர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர். அதில் கடந்த 2021- ம் வருடம் முதல் தேசிய அடையாள அட்டை 2,170 பயனாளிகளுக்கும், ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள செவித்திறன் கருவி 200 பயனாளிகளுக்கும், ரூபாய் 1,89,000 மதிப்புள்ள மூன்று சக்கர நாற்காலி 21 பயனாளிகளுக்கும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கான நாற்காலி 4 பயனாளிகளுக்கும், ரூபாய் 1,93,000 மதிப்புள்ள தாங்கிகள் 22 பயனாளிகளுக்கும், கருப்பு கண்ணாடி 60 பயனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |