தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எல்லா துறையும் வேகமாக இயங்குகின்றன. அதில் குறிப்பாக மருத்துவத் துறையின் அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட எல்லோருமே நன்றாக இயங்குகின்றன. அவர்களை அழைத்துப் பேசி என் வாழ்த்துக்களை சொல்லி வருகிறேன் என கூறியுள்ளார்.