தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பின்பும் பரிசோதனை கூடுதலாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பின்பும் தினம் 65 ஆயிரம் பேருக்கு கூடுதலாக பரிசோதனை நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனை எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் பாராட்டியுள்ளார்.