தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
நிலையில் தமிழகஅரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை ஜூன் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு நிலையில், ஏ.கே.எஸ் விஜயன் தமிழக அரசின் பிரதிநிதியாக செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர் திமுகவின் விவசாய அணிச் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.