தமிழக அரசு சார்பில் 34 கோடி மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 58க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2749 8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட மற்றும் கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மேலும் காணொளி கட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சுய உதவி குழு பயனாளிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இதற்குப்பின் மாவட்டத்தில் உள்ள 625 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சுமார் 34 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கனர் தண்டபாணி உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.