தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க கொள்கையின் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று தொழிலாளர்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட நிதி உதவி அளிப்பது. இதன் முதல் TANSEED பதிப்பு 2021 ஆம் வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கைக்குரிய 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் ஆரம்பகட்ட ஆதார நிதி அளித்து ஆதரவளித்தது. இந்நிலையில் தற்போது 2021 ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது ஸ்டார்ட் அப் பதிப்பினை 20 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் (ஜூலை 23 முதல்) இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.startuptn.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2021 ஆகும். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையதாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] – க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.