Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ரேஷன் கார்டு….. விண்ணப்பிப்பது எப்படி?…. தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விபரங்கள் இதோ….!!!!

தமிழக அரசின் ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது அதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை இதில் தெரிந்து கொள்வோம்.

தமிழக அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கியம். ரேஷன் கார்டு மூலமாகதான் பொதுமக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்றடைகின்றது. இந்த அட்டையை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ரேஷன் கார்டு வாங்குவதற்கான தகுதி மற்றும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். ரேஷன் கார்டின் முக்கிய நோக்கமே தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவதுதான். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அதிகாரபூர்வமாக ஆவணமாக பார்க்கப்படுகின்றது.

அனைத்து தேவைகளுக்கும் இந்த ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகின்றது. பொதுமக்கள் வசதிக்காக தற்போது ரேஷன் கார்டு டிஜிட்டல் கார்ட்டாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஜிட்டல் ரேஷன் அட்டையை வாங்குவதற்கு தகுதிகளும், விதிமுறைகளும் உள்ளது. இதை பின்பற்றி தான் இந்த கார்டை வாங்க முடியும். இதை பெறுவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவரது குடும்பத்தினரும் இந்திய குடிமக்களாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் குடும்ப அட்டையை வைத்திருக்கக்கூடாது.

விண்ணப்பதாரர் குடும்பம் தனியாக வசிப்பதாகவும், சமைப்பவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த குடும்ப அட்டையிலும் தங்கள் பெயர்களை உறுப்பினர்களாக வைத்திருக்கக்கூடாது. இந்த அட்டையை பெறுவதற்கு விண்ணப்பதாரரின் வசிப்பிடச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீட்டுக்கு சொத்து வரி செலுத்திய ரசீது, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டணம், வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் நபர்களாக இருந்தால் அதற்கான ஒதுக்கீடு ஆணை, பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம் ஆகியவையும் வைத்திருக்க வேண்டும். ரேஷன் கார்டுகான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் இந்த முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கி விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |