தமிழக மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன் துறை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியில் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: மீன் துறை ஆய்வாளர்.
காலியிடங்கள்: 64.
சம்பளம் மாதம்: 37,700-1,19,500.
தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வளர்ப்பு அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடற்கரை இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின் படி கணக்கிடப்படும்.
கட்டண விவரம்: பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.11.2022 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2023