ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிக்கை எண் 01/2021 நாள் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 முதல் வெளியிடப்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக TRB அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.