Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு,கல்லூரிகளில்…. ரூ.20,000 தொகுப்பூதியம்…. 2423 விரிவுரையாளர்கள் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்றின் காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் சரிவர இயங்கவில்லை. மேலும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர், இணை பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் 4000-க்கும்  மேற்பட்ட உதவி பேராசிரியர், இணைராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

ஆகவே கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்நிலையை சரி செய்யும்  நோக்கில் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்களின் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப, 2,423 கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நியமித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவர்கள் யுஜிசியின் விதிமுறைகளின்படி, அந்த பணிகளில் நியமிக்கப்பட வேண்டும். மேலும் அப்படி நியமிக்கப்படும் கவுரவ விரிவுரையாளர்கள், நிரந்தர பேராசிரியர்களின் பணியில் சேரும் வரையிலோ அல்லது கல்வி ஆண்டின் இறுதி வரையிலோ அந்த பணியில் தொடருவார்கள். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 வரை தொகுப்பூதியமாக வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்காக 53.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |