கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
நாட்டை சூறையாடி வரும் கொரோனா தமிழகத்தில் பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்ககு பண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்ற பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரண நிதிக்கு வழங்கினார். தமிழக முதல்வர் வெளியிட்ட நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்துள்ளது என்ற தகவலை வெளியிடுவது குறித்து நீதிமன்றம் கருது தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது ? எங்கிருந்து வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னதாக இந்த தொகையை வெளியிடுவதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.