Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம்”… அரசு ஊழியர்கள் போட்ட பிளான்…. அமைச்சருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!!!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் துறை சார்ந்த அமைச்சர் பங்கேற்க  இருக்கின்றார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு உள்ள அதிகாரங்களை அளிப்பது மற்றும் கணினி உதவியாளர்களின் வேலையை நிரந்தரப்படுத்த படுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றது. கடந்த ஆட்சி காலத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் பிரித்து அறிவித்துள்ளனர். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கப்பட வேண்டும். 12525 கிராம ஊராட்சிகள் இருக்கின்றது. இதனை 20000 ஊராட்சிகள் ஆக ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என இருக்க வேண்டும்.

மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நகராட்சிகள் இருக்கிறது. அதனால் மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்வதில் பெரிய சிரமங்கள் இருக்கின்றது அதனை பிரிக்கவேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு குறைவாக இருக்கின்றது. மாநில அரசு மத்திய அரசிடம் கேட்கின்றது. அதேபோல் மாநில அரசும் உள்ளாட்சிகளுக்கு மாநில அரசு நிதி பகிர்வு வழங்க வேண்டும்.  100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்குவது இல்லை. கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 6000 கோடி வரை மத்திய அரசு விடுவிக்க  இருக்கின்றது. மேலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தை  விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |