புயல் தொடர்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாததால் தமிழக அரசிற்கு பாராட்டுக்கள் என ராஜா தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது.
இதனையடுத்தே பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புயல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளால் உயிர் சேதம், பொருள் சேதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். தமிழக அரசிற்கு பாராட்டுக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.