நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திராவிட கழக தலைவர் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அதாவது, இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 நாட்கள் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் முடிவடையும். இந்தப் பயணம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும். அரசியலமைப்பு விதிகளை மீறி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாநில அரசுகள் எடுக்க வேண்டிய கல்விக் கொள்கையை மத்திய அரசு எடுத்துள்ளது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை குழு நீட் மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை திட்டமிட்டபடி வழி நடத்த முடியாமல் ஆளுநர் தடை செய்கிறார்.
தமிழகத்தில் கல்வி நிலை. மருத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கல்வி போன்றவைகளில் கஜானா காலியாக இருப்பினும் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய நாடே திராவிட முன்னேற்ற கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்கின்றனர். மக்களின் வளர்ச்சிக்காக அரசு கடன் பெற்று ஆட்சி நடத்தி வரும் நிலையில் ஆளுநர் நீட் மசோதாவை ரத்து செய்வது தொடர்பான மனுவை ஜனாதிபதி அனுப்ப முடியாது எனக்கூறி மாநிலமும், திராவிட முன்னேற்ற கழகமும் வளரக்கூடாது என்கிறார். நீட் தேர்வு என்பது மண்ணில் புதைக்கப்பட்ட கண்ணி வெடி போன்றது. இது மாணவர்களுக்கு ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தும்.
அதாவது ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்யும் விதமாகவ நீட் தேர்வு அமைந்துள்ளது. எனவே இதை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும். மேலும் ஆளுநரை தேவைப்பட்டால் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்து மக்களை தயார் படுத்தும் விதமாகவே சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பு முயற்சிகளை தடுக்கவும், தடைகளை உடைக்கவும் போராட்டம் நடைபெறுகிறது. ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என திராவிட கழக தலைவர் பேசினார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.