Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு புது நெருக்கடி…! என்ன செய்வார் இபிஎஸ் ? கவலையில் அதிமுகவினர் …!!

பல நாட்களாக போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

அதற்கு முன்னதாகவே போக்குவரத்து துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லது 25 ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக 11 தொழிற்சங்க அமைப்புகள் அறிவித்துள்ளன.

முன்னதாக  போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு ஏதேனும்  அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் ஒவ்வொரு பணிமனை முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய 11 சங்கங்கள் கூட்டமைப்பாக போராட்டம் முடிவை எடுத்துள்ளதால் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகின்றது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் இந்தப் போராட்டம் ஆளும் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |