கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து, எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும். பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மூணாவது வாரத்தை விட கடைசி வாரத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.