தமிழக அரசு போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக சென்னையில் ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் விடத் திட்டம் உள்ளதாகவும், படிப்படியாக தமிழக முழுவதும் 25 சதவீதம் போக்குவரத்து தனியார் மயம் ஆக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார் அமைச்சர் சிவசங்கர். மேலும் அவர், தமிழகத்தில் மாணவர்கள், பெண்களுக்கு “நாட்டிலேயே இல்லாத அளவுக்கு இலவசப் பயணத் திட்டம் உள்ளது. சிறப்பாக செயல்படும் துறையாக போக்குவரத்துத் துறை உள்ளது. விரைவில் தேவைப்படும் பகுதிகளில் மட்டும் மினி பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.