Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. 35 வகையான பயிற்சி வகுப்புகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு சலுகைகளை பெற்று அம்மக்கள் பயனடைந்து வருகின்றனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச கல்வியும் வழங்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலன் காக்கும் அடுத்த நடவடிக்கையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் கீழ் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதன்படி தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மொத்தம் 1464 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக ஆங்கில இலக்கணம், செயல்வழிக்கற்றல் முறை, புதிய பாடத்திட்டம், ஆங்கிலப் பேச்சாற்றல் அறிவுத்திறன் வகுப்பு மற்றும் கணினி பயிற்சி ஆகிய பயிற்சிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |