தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை “ஸ்மார்ட் ரோட்”என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக சாலைகளில் பல்வேறு ஸ்மார்ட் வசதிகள் அறிமுகமாகிறது. அதிலும் குறிப்பாக இலவச வைஃபை, சிறப்பு நடைபாதை, சைக்கிள் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பாதை, சாலை முழுவதும் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் 7 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேம்படுத்த உள்ள ஸ்மார்ட் சாலைகளின் சிறப்பு அம்சங்கள்:
நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் மற்றும் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும். வாகனங்களின் வேகம் 50 கிலோ மீட்டருக்குள் கட்டுப்படுத்தும் அம்சம். Wi-fi கம்பங்கள், சிசிடிவி கேமராக்கள், தகவல் கியாஸ்க்குகள், போக்குவரத்தை எளிதாக்கும் அம்சங்கள். சென்னையில் GST, GWT, GNT உள்ளிட்ட சாலை, வேளச்சேரி பைபாஸ், மர்மலாங் பாலம் -இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி -ஆவடி சாலைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.