Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே முந்துங்கள் மக்களே….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகளின் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் துயரைப் போக்கும் வகையில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் நகர்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மழையால் தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். நடமாடும் காய்கறி கடைகள் மூலமும் தக்காளி விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |