Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு”… செங்கரும்பு, கட்டி வெல்லம்…? கூடுதல் ட்விஸ்ட்…!!!!!!

உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் பொங்கல் கழித்து பல கரும்புகள் வீணாக வாய்ப்புள்ளது.

அரசே  கரும்பை கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பா.ம.க ராமதாஸ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பொங்கல்  பரிசு தொகுப்பில் கூடுதல் பொருட்களை சேர்க்க வேண்டும் எனவும் பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தி.மு.க அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ள சி.பி.எம் கட்சியும் அரசிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

அதாவது அந்த கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் உட்பட பரிசு பொருட்களை வழங்கும் தமிழக அரசு செங்கரும்பும், கட்டி வெல்லமும் மேலும் சில பொருட்களும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் செங்கரும்பு விவசாயிகளிடமிருந்தும், வெல்லம் உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியாக அரசு கொள்முதல் செய்து கொள்ளலாம். இதனால் விலைப்பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் பொங்கல் தொகுப்பில் மேலும் சில பொருட்கள் சேர்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |