தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலில் உள்ள அலுவலர்கள் எந்தவிதக் காரணமும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு இன்று பள்ளிகளில் முக்கிய தேர்வு நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு நடைபெற இருந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை ( பிப்.10 ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 18-ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் வகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.