Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு இதை செய்யும் என நம்புகிறோம்… பாமக அன்புமணி சொன்ன காரணம்…!!!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இதில் சில அம்சங்களும் இருக்கிறது. 10.5 செய்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் ஏழு காரணங்களை கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர்.

அந்த ஏழு காரணங்களில் 6 காரணங்கள் தவறு என்று என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும்  ஒரே ஒரு காரணத்தால் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதாவது புள்ளிவிவரங்கள் இல்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி தணிகாசலம் வழங்கிய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு முடிவு கிடையாது தொடர்ச்சிதான் எனவும், இப்போது தமிழக அரசு உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி வன்னியர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்களை திரட்டி உடனடியாக சட்டப்பேரவை சட்டமியற்றி இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.

மேலும் இதனை நிச்சயமாக செய்ய முடியும் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீட்டை மாநில அரசு கொண்டு வரலாம் எனவும், உள் இட ஒதுக்கீடு கொண்டு வரலாம் எனவும், ஒரு தனிப்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டுவரலாம். மேலும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே புள்ளி விவரங்களை திரட்டி சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசு இதைச் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் 1984ஆம் ஆண்டு அம்பாசங்கர் குழுவின் வீடாக சென்று புள்ளிவிவரங்கள் சேகரித்தது.

அதற்குமுன் 1969ஆம் ஆண்டு சட்டநாதன் பரிந்துரைகளை அளித்துள்ளது. பிரதிநிதி அரசுகள் ஜனார்த்தனன், தணிகாசலம் பரிந்துரைகள் அத்தனை புள்ளிவிவரங்கள் இருக்கிறது. ஆனாலும் நிதி அரசு தணிகாசலம் இன்னும் சரியான முறையில் விவரங்களை கொடுத்திருக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆலோசனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |